நெப்டியூன் கிரகம் அப்பால் உள்ள அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா கூறியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு, புளூட்டோ கிரகத்திற்கு அப்பால் உள்ள விண்கற்களைப் பற்றி ஆராய நியூ ஹாரிசன் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. பூமியில் இருந்து சுமார் 400 கோடி கிமீ தொலைவில் இருக்கும் புளூட்டோ கிரகத்தின் வளிமண்டலத்தை அடைய அந்த விண்கலத்திற்கு 9½ ஆண்டுகள் தேவைப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டில் குய்ப்பர் பெல்ட் எனப்படும் நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் குட்டைக் கோள்கள் அதிகம் இருக்கும் பகுதியைத் தாண்டியது.
இதை அடுத்து சூரியக்குடும்பத்தின் விளிம்பில் உள்ள வான்பொருட்களை ஆராய தொடங்கிய போது, புளூட்டோவிலிருந்து சுமார் 2,200 தொலைவில், அல்டிமா துலே என்ற ஒரு மிகப்பெரிய விண்கல்லை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி, இந்த விண்கலம் படம் பிடித்து அனுப்பியது. இதை தொடர்ந்து, அல்டிமா துலேவில் நியூ ஹாரிசான் விண்கலம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், 30 கிலோ மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்பொருளில், பனி வடிவில் நீர் இருப்பதும், மெத்தனால் மற்றும் இயற்கை மூலக்கூறுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.